திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (19:41 IST)

8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ...

திருச்சி  மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து  விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு  வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்ற  8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 20 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளத்தாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.