புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (17:15 IST)

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 15 ஆம் தேதி காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது.

இதுகுறித்து தகவல் அறிந்து .  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில் 4 துணை சூப்பிரண்டுகள் தலைமையில், 8   தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா சென்றனர்.

இந்நிலையில், டீக்கா ராமன் என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.