செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (17:28 IST)

குடியாத்தத்தை அடுத்து மேலும் ஒரு நகராட்சியில் 8 நாள் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒருசில நகரங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் செய்திகள் வெளியாகி வருகிறது
 
சற்றுமுன்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து அந்நகராட்சியில் வரும் 24ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி பகுதியில் 8 நாட்கள் பால், மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் தவிர மற்ற எந்த கடைகளை திறக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது குடியாத்தம் நகராட்சியை அடுத்து புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளிலும் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது