1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (17:36 IST)

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினருக்கு அனுமதி மறுத்தது ஏன்?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டும். அந்த வகையில் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 48 நாட்கள் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்
 
அத்திவரதரை தரிசிக்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்காக சிறப்பு ரயில்களையும் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது
 
இந்த நிலையில் அத்திவரதரை தரிசிக்க இன்று போலந்து நாட்டில் இருந்து 7 பேர் காஞ்சிபுரம் வந்தனர். அவர்கள் கோவில் நிர்வாகத்தினர்களிடமும் அர்ச்சகர்களிடமும் அனுமதி பெற்று அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நின்றனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த 7 பேர்களையும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க மறுத்தனர்.
 
இதுகுறித்து அவர்கள் கூறிய காரணம், போலந்து நாட்டை சேர்ந்த 7 பேர்களின் உடை சரியில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் 7 போலந்து நாட்டினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.