திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (15:16 IST)

ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி!

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் என்ற ஆறு ஓடுகிற்து. இந்த ஆற்றின் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

தற்போது மழையின் காரணமாக இந்தத் தடுப்பாணையில் தண்ணீர் உள்ளது. இந்த தடுப்பணைய்ய்ல் அப்பகுதியைச் சேர்ந்த பிரியா, மோனிசா, சங்கவி,  சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் குளிக்கச் சென்றனர்.

அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கியதால்  நீரில் மூழ்கினர்.  எனவே அவர்களின் கூச்சலிட்டதைக் கேட்டு அருகிலிருந்தோர் வந்து அவர்களை மீட்டனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவமர்கள் ஏற்கனவே உயிரியழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.