செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (16:11 IST)

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் பலி – அமித் ஷா இரங்கல்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் குறித்து இரங்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நெய்வேலி என்.எல்.சியில் நடந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்து  வேதனையை அடைந்தேன். இந்த  விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பேசியுள்ளேன்.

மத்திய அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என  அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி ஊழியர்கள் விபத்து நடத்த இடத்தைச் சுற்றி உள்ளாதால் அங்கு பாதுக்காப்பு பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர்.