தொடர்புடைய செய்திகள்
- அப்பா-மகள் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்!
- ரஜினிக்கு எதிராக விஜய்யை களமிறக்கும் அரசியல்வாதிகள்
- மாஸ்டர் படப்பிடிப்பிற்கு பாஜகவினர் எதிர்ப்பு
- "மாஸ்டர்" இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லப்போகும் "குட்டிக்கதை" இது தான்...?
- ரஜினி ஏமாத்தலை: விஜய்தான் ஏமாத்துறார்! – அர்ஜுன் சம்பத் குற்றசாட்டு
தாமரை ம***ல கூட மலராது: கடுப்பான விஜய் ரசிகர்கள்!!!
விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் பாஜகவை எதிர்த்து ஹேஷ்டேக்குகளையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியின் என்.எல்.சி. சுரங்கத்தில் நடந்து வந்த நிலையில், விஜய்யை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் விஜய் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத ஆவணங்களோ ரூபாயோ எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று விஜய் மீண்டும் நெய்வேலி சுரங்கத்தில் நடைபெறும் படபிடிப்பில் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பிற்கு நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது தவறு என சுரங்கத்தின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் படபிடிப்பு நடத்த எப்படி அனுமதி அளிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் கோபத்திற்குள்ளான விஜய் ரசிகர்கள், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி முன் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். இவர்களோடு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினரும் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறார்.
இதோடு, சமூக வலைத்தளமான டிவிட்டரில் பாஜகவை எதிர்த்து ஹேஷ்டேக்குகளையும் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் பாஜக வழக்கம் போல மாஸ்டர் படத்திற்கு ஃப்ரீ ப்ரமோஷன் செய்து கொடுப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
