1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Public exam paper correction starts today

முடிந்த பொதுத்தேர்வுகள்: இன்று முதல் Paper Correction!

tamil nadu
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
 
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. தற்போது பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
 
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
வந்தாச்சு ஜூன்... சிலிண்டர் விலையில் ஏற்றமா? இறக்கமா?