1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:58 IST)

அரசு அதிகாரி வீட்டில் 6.5.கிலோ தங்கம் பறிமுதல்!

சேலத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடலாச்சலத்தின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.