திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:28 IST)

5ஜி அலைக்கற்றை நடைமுறை: அரசு துரிதம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை மாநாடு   இன்று  நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  5ஜி அலைக்கற்றை நடைமுறைக்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் திமுக அரசு 2024-2025 அம ஆண்டிற்காக பொதுபட்ஜெட் தாக்கல் செய்தது. இதையடுத்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று, ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை மாநாடு  நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  5ஜி அலைக்கற்றை நடைமுறைக்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஐ.டி துறை தொடர்பான பல கொள்கைகளை உருவாக்கியுள்ளோம்.டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் உலக மனிதவள தலைநகரமாக தமிழ் நாட்டை மாற்றுவதே என் கனவு. ஐ.டி துறை வளர்ச்சி அடைவது நம் கண் முன்னே தெரிகிறது.
 
ஆங்கிலம் அல்லாத மொழியில் முதல் தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது தமிழ் நாடு.5 ஜி அலைக்கற்றை நடைமுறைகளை தமிழ்நாடு  துரிதப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.