திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:20 IST)

'தேர்தலுக்குப் பின் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
திமுக மாவட்டச் செயலாளர்கள்,தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்   நடைபெற்றது. இதில் பங்கேற்கு பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'தேர்தலுக்குப் பின்  மாற்றங்களை எதிர்பார்க்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக  காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று, திமுக மாவட்டச் செயலாளர்கள்,தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்   நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தலுக்குப்பின்  மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
அடிமட்ட தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை அறிவித்துள்ளது.
40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்ளை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
 
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அரசிலும் கட்சியிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையை வீடுவீடாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், பாஜக அரசின் அநீதிகள், திமுகவின் சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.