திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (12:54 IST)

அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

saminathan-  father
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி மறைவையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில்,  ''மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை  முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
 
தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார்.  பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ளை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.