1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (10:30 IST)

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் என தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.  நேற்று, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள்  பேரவைத் தலைவர்கள் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம்  நேற்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.