சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி!- ராதா கிருஷ்ணன்
தமிழகத்தில் சில மாதங்கள் குறைந்திருந்த கொரொனா தொற்று சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை மக்கள் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் போட வேண்டும் என அறிவுறித்தியது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகை கொரொனா பாதிக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியவரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.