1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Soars: Sovereign Crosses ₹74,000!

73,000ஐ மட்டுமல்ல, 74,000ஐயும் தாண்டியது தங்கம் விலை... இன்று ஒரே நாளில் ரூ.1560 உயர்வு..!

தங்கம் விலை
தங்கம் விலை ஒரு சவரன் நேற்று ₹72,000க்கு மேல் நிலையில் இருந்து  ₹73 ஆயிரத்தை இன்று தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ₹195 ரூபாயும், ஒரு சவரன் ₹1560 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில், ₹74,000ஐ  தங்கம் விலை தாண்டி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ₹1000 ரூபாய் உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,100
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,295
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,360
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,140
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,416
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   81,120
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஏர் இந்தியா விமான விபத்திற்கு துருக்கி காண்ட்ராக்ட் காரணமா? உண்மை என்ன? - அதிர்ச்சி தகவல்!