தொடர்புடைய செய்திகள்
- தாயை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகன்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
- iPhone வெறியால் டெலிவரி பாயை கொன்ற இளைஞர்கள்! - லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்!
- ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!
- முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!
- 4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை தாக்கல் செய்தது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சென்னை போலீஸ். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேரை கைது செய்துள்ள போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர் என தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் இந்த வழக்கில் உள்ள பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் கைதாக வாய்ப்பு என கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
