1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 மே 2023 (10:48 IST)

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல்: ஜூன் 3ல் அறிவிப்பை வெளியிடுகிறதா தமிழக அரசு?

tasmac
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடுவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் மதுகடைகளை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் நிலையில் சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 500 மதுக்கடைகள் மூடுவது குறித்த அறிவிப்பு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளை அடையாளம் காணும் பணி முடிவடைந்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மொத்தம் 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் 500 மதுக்கடைகள் மூடுவது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்தவாறு அந்த அறிவிப்பு வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருப்பதாகவும் தெரிகிறது
 
Edited by Mahendran