1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:48 IST)

இந்த ஆண்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்து தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் டாஸ்மாக் கடைகள் குறைக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 5329 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும் இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அதன் பிறகு 4,829 கடைகள் மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva