வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (11:36 IST)

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலர் கைது..!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலர் கைது..!
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருத்தாச்சலம் நகராட்சியில் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக பக்கிரி சாமி என்பவர் இருந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பதும் அந்த பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் பக்கிரி சாமி தனது பள்ளியில் படித்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் திமுக 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரி சாமியை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கியதால் பக்கிரிசாமி திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

Edited by Mahendran