வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (17:03 IST)

பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

anbhumani
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகராட்சியில், 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை  நடந்த விவகாரத்தில்  பள்ளித் தாளாளரை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் 30 வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரி சாமி. இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பக்கிரி சாமி தனது பள்ளியில் படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் திமுக 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரி சாமியை கைது செய்தனர்.

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை  நடந்த விவகாரத்தில்  பள்ளித் தாளாளரை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில்  5 வயது குழந்தையை அப்பள்ளியின் தாளாளரும்,  திமுக நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  பாதிக்கப்பட்ட குழந்தை  மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்!

தெய்வத்தைப் போன்று கொண்டாடப்பட வேண்டிய  பிஞ்சுக் குழந்தையை பாலியல் கொடுமை செய்ய  அவரது தாத்தா வயதில் உள்ள தாளாளருக்கு எப்படி மனம் வந்தது?  அவருடைய பள்ளியில் பயிலும் பிற குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?  இத்தகைய மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடத் தகுதியற்றவர்கள்!

குற்றஞ்சாட்டப்பட்ட  பக்கிரிசாமி புகார் கொடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகு தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமான நடவடிக்கை இல்லை. மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த பக்கிரிசாமியை உடனடியாக குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைக்க வேண்டும்!