மெழுகுவர்த்தியை உயர்த்திய ரஜினிகாந்த் – ட்ரெண்டான புகைப்படம்!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று டார்ச்லைட், மெழுவர்த்தி ஏந்திய அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி ஏற்றினர். பல பிரபலங்களும் தாங்கள் தீபம் ஏற்றியதை இணையத்தில் பதிவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டு கேட்டிற்கு வெளியே வந்து மெழுகுவர்த்தியுடன் நின்றார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் டார்ச் லைட் உபயோகித்து ஒளியூட்டினார்.
அப்போது இருவரும் கொடுத்த போஸ் நியூயார்க்கில் உள்ள சுதந்திரதேவி விளக்கை ஏந்தி நிற்கும் சிலையை போல் இருந்ததால் அதை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த சுதந்திர தேவி சிலை பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸின் எம்பளமாக இருப்பதால், இதுதான் கொலம்பியாவின் புது எம்பளம் என சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.