செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (11:29 IST)

300 கிலோ மீன்களை புதைத்த அதிகாரிகள் – திண்டுக்கலில் பரபரப்பு!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி விற்கப்பட்டதாக மீன்கள் பறிமுதல் செய்யப்ப்பட்ட சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சமூக இடைவெளியை பேண அத்தியாவசிய கடைகள், சந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. சென்னை, விழுப்புரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இறைச்சி, மீன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியில் மீன் வியாபாரிகள் சிலர் அனுமதியின்றி மீன் விற்பனையில் ஈடுபடுவதாக வெளியான தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வியாபாரிகளிடமிருந்து சுமார் 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து குழித்தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.