செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:22 IST)

உலக மனநல தினத்தன்று, உங்கள் மனநலனை மேம்படுத்த சத்குரு வழங்கும் 5 டிப்ஸ்!

நவீன காலத்தின் அதிவேகமான வாழ்க்கையில், நம் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் பல சமயம் நாம் உரிய கவனம் கொடுப்பதில்லை.


எனவே இந்த உலக மனநல தினத்தன்று, மனநலம் மேம்பட சுலபமாக செயல்படுத்தக்கூடிய விதமாக சத்குரு வழங்கியுள்ள மிகவும் பயனுள்ள 5 டிப்ஸை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். இவை நம் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை மறுசீரமைத்து நமது மலநலனை மேம்படுத்தக்கூடியவை ஆகும். 

1. உங்கள் உடலை பயன்படுத்துங்கள் - ஒவ்வொரு மனித உடலிலும் செயலுக்கும், உணர்வுக்கும் புத்திக்கும் குறிப்பிட்ட அளவிலான சக்தி ஒதுக்கப்படுகிறது. இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். எனினும், இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும் மனச்சோர்வும் ஏற்படுகிறது. மனநோய்களால் அவதிப்படும் குழந்தைகளை விளையாட்டிலும் இசையிலும் ஈடுபடுத்துவதை சத்குரு பரிந்துரைக்கிறார். ஏனென்றால் உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும் உடலை வருத்தாமலும் இருந்தால் மனச்சோர்வில் ஆழ்வது இயல்பானதுதான்.’ 

2. இயற்கையுடன் தொடர்பில் இருங்கள் - கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஸ்கிரீன்களே நம் அதிகப்படியான நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக்கொள்வதால், நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து நம் வாழ்க்கையை நடுத்துவது எதுவோ அதனுடனான தொடர்பை நாம் தொலைத்து வருகிறோம். விடுமுறைக்கு மும்பை அல்லது துபாய் செல்வதற்கு பதிலாக, காட்டு வழியாக நடந்து செல்வதும் ஏதாவது நீர்த்தேக்கத்தில் படகில் செல்வதோ மேலானது. இது ஒருவர் இயற்கையுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது, இது சுற்றியுள்ள உலகுடனான ஒருவரது ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் அதிகரிக்கும். இயற்கையிலுள்ள ஐம்பூதங்களான நீர், ஒளி, மண் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் ஒருவரது உடல்ரீதியான, உடலியக்க ரீதியான, மனரீதியான ஆரோக்கியத்தை மிக சுலபமாக பராமரிக்க முடியும். ஒருவர் எந்த அளவுக்கு இயற்கைக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் உடலியக்கரீதியாகவும் மனரீதியாகவும் சமநிலையாக இருப்பார். 

3. உங்கள் மன ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்தும் உணவை உண்ணுங்கள் - இந்த நாட்டில், உடலைக் கொண்டு வேலை செய்வோருக்கும் மனதைக்கொண்டு வேலை செய்வோருக்கும் நாம் வெவ்வேறு விதமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவோம். எனினும் இன்றைய வாழ்க்கையில், நாம் உடலளவில் திடமாகவும் மனதளவில் கூர்மையாகவும் இருக்கத் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் உடல் வேலையும் மன வேலையும் இப்போது ஒன்றில்லாமல் இன்னொன்று மட்டும் இருக்கும் நிலை காணாமல் போய்விட்டது. தினமும் ஒரு கிளாஸ் நீர்ப்பூசணி ஜூஸ் எடுத்துக்கொள்வது மனதின் தெளிவையும் கூர்மையையும் மேம்படுத்தும். காபி குடிப்பது பதட்டத்துடன் கூடிய சக்தியைத் தரும், ஆனால் நீர்ப்பூசணி ஜூஸ் அளப்பரிய சக்தியைத் தரும் அதே சமயம் உங்களை அமைதியாக வைத்திருக்கும். தினமும் தேன் எடுத்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ளது. அது உங்கள் மனதை ஸ்திரமாக்கும், உடலை ஆரோக்கியமாக்கும், உடலமைப்பை துடிப்பானதாக்கும். 

4. பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது - வெவ்வேறு உடல்களில் வியர்ப்பது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது மற்றும் வெளிமூச்சு வழியாக நிகழும் சுத்தப்படுத்தும் செயல்முறை, வெவ்வேறு நிலைகளில் நடைபெறுகின்றன. ஆரோக்கியமாக இருந்து சரியான உணவை உண்பவர்களுக்கு, மலம் கழித்த பிறகு சிறிதளவு கூட குடலில் எந்தக்கழிவும் இருக்கக்கூடாது. யோகாவில், பெருங்குடல் சுத்தமாக இருப்பது அதிமுக்கியமானது. இல்லாவிட்டால் அது மனித உடலில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சமனற்ற சூழ்நிலையை உருவாக்கும். மனதளவிலான பிரச்சனைகளுக்கும், பெருங்குடல் சுத்தமாக இல்லாததற்கும் நேரடி தொடர்பு உண்டு. இதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு வழக்கம் என்னவென்றால், எந்தவொரு நோய்க்கும் நீங்கள் ஏதோவொரு ஆயுர்வேத மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் உங்கள் குடலை சுத்தம்செய்ய பேதியை உண்டாக்கும் மருந்துகளைத் தருவார். “ஒருவர் காலையில் கண்விழித்ததும் இருவது நிமிடங்களுக்குள் பெருங்குடலில் உள்ள கழிவுகள் இயல்பாகவே வெளியேறிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒருவர் நோய்நிலையில் இருக்கக்கூடும், அல்லது வேகமாக அதை நோக்கிச் செல்லக்கூடும் - உடல்ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி.” 

5. நல்வாழ்வின் தொழில்நுட்பம் பயிலுங்கள் - உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் உயிர்சக்தியை நீங்கள் விரும்பும் விதமாக நிர்வகிப்பது, ஒருநிலையிலான வாழ்க்கையை உங்களுக்கு உருவாக்கித் தரும். ஈஷா அறக்கட்டளை வழங்கும் ஈஷா யோகா வகுப்பு அதைத்தான் செய்கிறது - எப்படி உடலளவில் ஆரோக்கியத்தையும், மனதளவில் அமைதியையும் ஆனந்தத்தையும், உணர்ச்சியளவில் ஸ்திரத்தன்மையையும் உயிரோட்டத்தையும் உற்சாகத்தையும், உயிர்சக்தியளவில் சமநிலையையும் உருவாக்குவது என்று வழிகாட்டுகிறது. இதை அடைவது, ஒருவரை நிறைவான, ஆனந்தமான வாழ்க்கையை வாழக்கூடிய முழுமையான மனிதராகுவதன் பாதைக்கு கொண்டு செல்லும்.