வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:22 IST)

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு..!

TN assembly
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவித்துள்ளது. இந்த எண்கள் மூலம் இதுவரை  84 பேரின் தகவல் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்த தகவல்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை மீட்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள தமிழர்கள் நலமாக இருப்பதாகவும், தங்குமிடம் மற்றும் உணவு தேவைகளுக்கான சிரமங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ளவர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது,
 
Edited by Siva