செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2022 (10:04 IST)

ஒரே நாளில் 5 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதாா் இணைப்பு: மின்வாரியம் தகவல்

aadhar eb
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
டிசம்பர் 31-ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இருந்தாலும் பொதுமக்கள் தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5 லட்சம் மின் இணைப்புகள் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் மின் இணைப்பு ஆதார் எண்ணை இணைக்க அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் மின் கட்டண வசூல் மையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva