வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (11:44 IST)

திடீரென அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பாதிப்பு!

flight eb
திடீரென அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பாதிப்பு!
மின் கம்பியில் மோதி விமானம் அந்தரத்தில் தொங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் இருளில் மூழ்கி பாதிப்படைந்துள்ளனர். 
 
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று மின்சாரம் வழங்கும் கம்பி மீது திடீரென மோதியது. இதனை அடுத்து மின்கம்பியில் அந்த விமானம் அந்தரத்தில் தொங்கியதாக தெரிகிறது 
 
இதனால் மின் இணைப்பு தடைபட்டதன் காரணமாக ஒரு லட்சம் வீடுகள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு  மின்சாரம் செல்லவில்லை என்பதால் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்தனர்
 
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் மின்சார துறையினர் உடனடியாக கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விமானத்தை மீட்டனர். இதனையடுத்து மின் இணைப்பு மீண்டும் வழங்கும் பணியில் மின்சார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன மற்றும் பள்ளி
 
Edted by Mahendran