செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (07:01 IST)

மணப்பாறை நகராட்சி: வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் திமுகவுக்கு ஆதரவு

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணப்பட்ட நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனைத்து மாநகராட்சிகளிலும் 90 சதத்திற்கும் அதிகமான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி களையும் திமுக கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுக கோட்டை என்று கூறப்பட்ட கோவை மாநகராட்சி திமுக வசமாகி உள்ளது 
 
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களும் அமைச்சர் கே என் நேரு அன்பில் மகேஷ் ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு தங்களது ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் மணப்பாறை நகராட்சியும் திமுக வசம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது