நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்...சென்னையைக் கைப்பற்றிய திமுக.....
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும் நேற்று தேர்தல் நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேனியில் 22 பேரூராட்சிகளில் சுமார் 19 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் 200 வார்டுகளைக் கொண்ட மிகப்பெரிய மா நகராட்சியான சென்னையில் திமுக 146 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் நீண்டவருடங்களுக்குப் பிறகு திமுக வேட்பாளர் மேயர் பதவியை ஏற்கவுள்ளார்.