புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:27 IST)

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 40,910 போலீசார் பாதுகாப்பு: டிஜிபி தகவல்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 40 ஆயிரத்து 910 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன 
 
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 40901 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவரை ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
 
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவோர் அடையாள அட்டையை காண்பித்து அளிக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்