புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (18:22 IST)

வேட்டி ,சட்டை, தோளில் ஸ்டைலா துண்டு .. கெத்தாய் வலம் வரும் பிரதமர் மோடி !

தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற  இடமான மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி -  சீன அதிபருக்குமான  வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடக்கவுள்ளது., இந்நிலையில் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை வந்து இறங்கிய நிலையில் தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளார்.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் இரு நாட்டு உறவுகள், பொருளாதாரம் குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.  இதை தொடர்ந்து சற்று முன்னர் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோடி சென்னைக்கு வந்த நிலையில், தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அவரை வரவேற்பதற்கு மேளவாத்தியங்கள், கலை நடனங்கள் ஆகியவை ஏற்பாடு செயப்பட்டுள்ளது. மேலும் இன்று மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் சீன அதிபர், மாலை கோவளத்தில் மோடியை சந்திக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று இரவு மாமல்லபுரம் இரவு விருந்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். மேலும் இரவு விருந்தில் இருவருக்கும் தமிழக உணவுகள் பரிமாறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது மாமல்லபுரத்துக்குப் பலத்த பாதுகாப்புடன் சென்ற பிரதமர் மோடி, வழக்கமாக அணியும் குர்தாவுக்குப் பதிலாக தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வெள்ளை, வேட்டி - சட்டை , தோளில் ஒருதுண்டு சகிதமாக அணிந்துள்ள மோடி பச்சைத் தமிழராகவே மாறிவிட்டார் என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.