புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (08:59 IST)

குரூப் 4 தேர்வில் முறைகேடு… ஒரே மாவட்டத்தில் தேர்வெழுதியவர்கள் முன்னிலை – அதிர்ச்சியளிக்க வைக்கும் காரணம் !

அண்மையில் வெளிவந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்தேகம் அதிகமாகியுள்ளது.

அந்த 40 பேரை சென்னைக்கு வர சொல்லி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ’நீங்கள் ஏன் உங்கள் மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்காமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுத்தீர்கள் ?’  என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர்கள் ’அனைவரும் எங்கள் பாட்டி மற்றும் தாத்தா அல்லது பாட்டி ஆகியோருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் சென்றோம் அப்படியே அங்கேயே தேர்வு எழுதி விட்டு வந்தோம்’ என கூறியுள்ளனர்.

இந்த பதில், சந்தேகத்தை மேலும் வலுவாக்க அடுத்த கட்ட விசாரணைகள் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.