1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (20:55 IST)

கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சட்டப்பேரவையில் விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தும் ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். 
 
இதனையடுத்து கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.