புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (13:17 IST)

ஒருநாள் முழுவதும் நடுக்கடலில் மிதந்த 4 மீனவர்கள்! – காப்பாற்றிய சக மீனவர்கள்!

புதுக்கோட்டை மணல்மேல்குடியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலில் மாயமான நிலையில் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க புறப்பட்டு சென்றுள்ளனர்.

மாலை கரைதிரும்ப வேண்டியவர்கள் திரும்பாததால் உறவினர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 2 படகுகளில் கடலுக்கு சென்று தேடியுள்ளனர். நேற்று முழுவதும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் பலர் 20 நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று தேடியபோது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நான்கு பேரையும் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

நால்வரும் நண்டு வலை எடுத்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் அதிகரித்ததால் படகோடு இழுத்து செல்லப்பட்டதாகவும், பின்னர் படகு உடைந்ததால் தண்ணீரில் இரவு முழுவதும் தத்தளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.