செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (09:15 IST)

வானிலை மாறி தமிழகத்தில் வெயில் தெரிவது எப்போது?

வரும் 20 ஆம் தேதி தான் முழுமையான வானிலை மாறி வெயில் தெரியும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இப்போது இருக்கும் மழை முழுமையாக விலக வேண்டும் என்றால் 19 ஆம் தேதி வரைக்கும் காத்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி தான் முழுமையான வானிலை மாறி வெயில் தெரியும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முழுமையான மழை இல்லாத நாளாக 21, 22, 23, 24 ஆம் தேதி என 4 நாட்களுக்கு மழை இருக்காது. இதனைத்தொடர்ந்து 25 ஆம் தேதி அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் மழை துவங்கி டிசம்பர் 3 வரை இருக்க கூடும். ஒட்டுமொத்தமாக தமிழகம் இன்னும் நிறைய மழை பொழிவை பார்க்க காத்திருக்கிறது.