1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:47 IST)

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தகுந்த நடவடிக்கை எடுத்த போலீசார் தற்போது நான்கு இளைஞர்களை கைது செய்திருப்பதாகவும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் இது குறித்து

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் கூறிய நிலையில் வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகியோரைக் கைது செய்துள்ளதாகவும்,  அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்,.

கடந்த 2 நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை என்ற கிராமத்தில், பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலை மீது பைக்கில் வந்த  4 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால் அந்த குண்டு சிலை மீது படாமல் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் விழுந்து வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva