வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:41 IST)

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது.. என்ன காரணம்?

udhayakumar
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரையில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஆர்பி உதயகுமார் போராட்டத்தை கைவிட மறந்து விட்டதை அடுத்து அவரும் அவருடைய ஆதரவாளர் 200 பேரும் கைது செய்யப்பட்டனர் கேரளாவை சேர்ந்த உரத் தொழிற்சாலை இறைச்சி கழிவுகளை உரமாக மாற்றும் பணியை செய்து வரும் நிலையில் அந்த தொழிற்சாலை காரணமாக சுற்றி உள்ள கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva