வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (09:12 IST)

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. கடலூரில் பெரும் பரபரப்பு..!

கடலூரில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தி வருவது நடந்து வரும் நிலையில் தற்போது கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அம்பேத்கர் சிலை மீது மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் கொண்டு சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளதாகவும் அம்பேத்கர் சிலைக்கு இந்த சம்பவத்தால் எந்தவித சேதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் அம்பேத்கர் சிலையை தகர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெட்ரோல் குண்டு வீசி இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva