1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (11:04 IST)

37 தமிழக அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்: உயர்கல்வித்துறை நியமனம்:

தமிழகத்திலுள்ள 37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
 
பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றும் அந்த 37 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர்களை முதல்வராக உயர்கல்வித்துறை சற்றுமுன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் ஆகியவற்றில் இந்த 37 முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதல்வர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்