தொடர்புடைய செய்திகள்
- அறநிலையத்துறை யார்கிட்ட இருக்கு? அரசிடமா? ஆர்.எஸ்.எஸ்சிடமா? – சீமான் கேள்வி!
- உடல் உறுப்பு தானம் பெற ஆதார் அவசியம்! – தமிழக அரசு புதிய உத்தரவு!
- பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்! – தமிழக அரசு அறிவிப்பு!
- ஆத்தாடி.. மின்னல் வேகத்துல வறாரே.. தெறித்து ஓடிய திருடர்கள்! – சினிமாவை மிஞ்சிய சேஸிங்!
- தமிழகத்தை பதம் பார்த்த கனமழை! – இன்று எங்கெங்கு பள்ளிகள் விடுமுறை?
அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது! – உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது நான்கு கோவில்கள் சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அட்மிசனும் நடந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் கல்லூரி திறக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு முடிவும் தீர்ப்பின் முடிவை பொறுத்ததே எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
