1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 300 workers protest in Kindi industrial zone!

கிண்டி தொழிற்பேட்டையில் 300 தொழிலாளர்கள் போராட்டம்!

300 workers protest
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே தாம்பரத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பொது இடத்தில் கூடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் கிண்டி தொழிற்பேட்டையில் சுமார் 300 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருகு அனுப்பி வைக்கக் கோரி தீடீரென்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கோயம்பேட்டில் தொடர்புடையோர் 88 பேருக்கு கொரோனா !