செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (08:00 IST)

கள்ளச்சாராம் பலி 30ஆக உயர்வு.. சாராய வியாபாரி மனைவியும் கைது..!

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது 30 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து அவசர ஆலோசனை செய்ய முதல்வர் ஸ்டாலின் என்ற முடிவு செய்திருப்பதாகவும் இந்த ஆலோசனையில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக்கு பின்னர் கள்ளச்சாரயத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஏற்கனவே  கோவிந்தராஜன், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் கைது நடவடிக்கை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

Edited by Siva