வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (16:21 IST)

சாதி மறுப்பு பேசிய டீ தூள் விளம்பரம்! – ட்ரெண்டிங் ஆன வீடியோ!

சாதி மறுப்பு பேசிய டீ தூள் விளம்பரம்! – ட்ரெண்டிங் ஆன வீடியோ!
சாதிய பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வெளியாகியுள்ள டீ தூள் விளம்பரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சமீப காலமாக சாதியம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் தொடர்ந்து திரைப்படங்களிலும், பொது வெளியிலும் அதிகமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சாதிய கொடுமைகள் குறித்து வெளியான அசுரன் மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில திரைப்படங்களும் மக்களால் பெரிது ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் 3 ரோசஸ் டீ தூள் நிறுவனம் சாதிய ஒழிப்பை முதன்மைப்படுத்தி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சாதிய கலப்பு மணம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பர வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.