1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (12:57 IST)

ஒன்றியத்துல நீங்க! மாவட்டத்துல நாங்க! அதிமுக – திமுக முன்னிலை!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக – திமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 76 இடங்களில் முன்னிலை பெற்று முதலாதவதாகவும், 52 இடங்கள் முன்னிலை பெற்று திமுக இரண்டாவதாகவும் உள்ளது. ஆனால் மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கையில் அப்படியே மாற்றமாக திமுக 58 இடங்கள் முன்னிலை பெற்று முதலாவதாகவும், 41 இடங்கள் முன்னிலையில் அதிமுக இரண்டாவதாகவும் உள்ளது.

முன்னிலை விகிதம் இரு கட்சிகளுக்கு இடையேயும் மிகவும் சொற்பமான அளவிலேயே இருப்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் பதற்றம் நீடிக்கும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இருவேறு தேர்தலில் இரண்டு பெறும் கட்சிகளும் முன்னிலை வகிப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.