1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (10:11 IST)

3 குற்றவியல் சட்டங்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும்விரோதமானது -துரை வைகோ!

திருச்சியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இன்று பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர். 
 
இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
 
இந்த  பேரணிக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ நேரில் ஆதரவு தெரிவித்தார்.
 
பின்னர் துரை. வைகோ எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மூன்று குற்றவியல் சட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடாது.
 
சட்ட நிபுணர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள்,ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு ஒரு குழு அமைத்து அந்த சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
 
மூன்று குற்றவியல் சட்டங்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கும்  ஜனநாயகத்திற்கும் விரோதமானது என்று கூறினார்.