புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (11:10 IST)

அப்படி ஒரு நிலைமை வந்தா அமைச்சரவையே எங்களுக்கு தேவையில்ல?? – துரை வைகோ உறுதி!

Durai Vaiko
நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றால் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம்பெறாது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.



நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதுமே இந்தியாவை உற்றுநோக்கி வருகிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் – மதிமுக இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னதாக ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது சர்ச்சையாக, பதிலுக்கு காங்கிரஸும் மதிமுகவை கண்டிக்க தொடங்கிய நிலையில் திமுக இருவரையும் சமரசம் செய்தது. இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஒரே கூட்டணியில் இரு கட்சிகளும் போட்டியிட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் “இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் மதிமுக அமைச்சரவையில் இடம்பெறுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துரை வைகோ “இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் கண்டிப்பாக மதிமுக அமைச்சரவையில் இடம்பெறாது” என உறுதியாக கூறியுள்ளார். கூட்டணியில் இருந்தாலும் அடிக்கடி காங் – மதிமுக முட்டிக் கொள்வது பிற தோழமை கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

Edit by Prasanth.K