வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திருச்சி , புதன், 5 ஜூன் 2024 (14:22 IST)

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பேரணி!

திருச்சியில் பல்வேறு இடங்களில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
 
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு பேரணியும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
 
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 101 -வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும்  விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
 
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பேரணி நடைபெற்றது. திருச்சிஅண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து, டிவிஎஸ் டோல்கேட் வரை நடைபெற்ற இந்த பேரணியை தொடக்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலத்தில் நடந்தே வந்தார். 
 
பின்னர், டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 
இந்த நிகழ்வில், மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன்,துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர்கள் ஏ.எம்.ஜி விஜயகுமார், கொட்டப்பட்டு தர்மராஜ், பாபு,மணிவேல்,நீலமேகம், சிவக்குமார், மோகன்,ராஜ் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல,திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட வார்டுகள் மற்றும் மாநகரப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டு, கருணாநிதி படத்துக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 
பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள் இல்லத்திலும் உணவு வழங்கப்பட்டது.