1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 24 hours vaccination plan started in Tamil Nadu

24 மணி நேரமும் தடுப்பூசி - தமிழக அரசு புதிய திட்டம்!

இந்தியா
இந்தியாவிலேயே தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. 
 
இதனிடையே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி குறித்து கூறியதாவது, தமிழகத்தில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறது. அதேசமயம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆம், இந்தியாவிலேயே முதன் முறையாக 36 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் 55 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash