பஞ்சாயத்து தலைவராக 21 வயது மாணவி தேர்வு !
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக 116 இடங்களிலும், திமுக 137 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 445 இடங்களும், திமுக 396 இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த சரஸ்வதி என்பவர், தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கான்புரம் பஞ்சாயத்து தலைவரானார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டு 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டிநாயக்கந்தொட்டி ஊராட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட 21 வயது மாணவி சத்தியாராணி வெற்றி பெற்றுள்ளார்.