ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜூலை 2024 (08:30 IST)

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு.. சிபிசிஐடி அதிரடி..!

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்தனர். காவலில் எடுத்து மாதேஷை விசாரித்த போது சில அதிர்ச்சி தகவல் கிடைத்தன. அதாவது வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில்  2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாக தகவலை அடுத்து அந்த பெட்ரோல் பங்கில் நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். பதுக்கி வைத்த மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பத்துவத்துக்கு மெத்தனால் அதிக அளவில் கலந்தது தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் தற்போது 2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதே போல் இன்னும் எத்தனை இடங்களில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? கள்ளச்சாராயம் காய்ச்ச யார் யார் எல்லாம் மெத்தனால் சப்ளை செய்திருக்கிறார்கள்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva