ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (16:50 IST)

தமிழ்நாட்டில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடி.. எங்கெங்கு தெரியுமா? – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளை பயன்படுத்தும் இலகுரக, கனரக வாகனங்களுக்கு அதன் தன்மைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக மேலும் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பெங்களூர் – சென்னை விரைவுச்சாலையில் 6 சுங்கச்சாவடிகளும், விழுப்புர- நாகை நெடுஞ்சாலயில் 3, விக்கிரவாண்டி – நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர் – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர் – தச்சூர் விரைவுச்சாலையில் 3 மற்றும் மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தமாக 20 சுங்கச்சாவடிகள் வரும் காலங்களில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டோல்கேட் கட்டணம் காரணமாக கனரக வாகனங்கள் வாடகை உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் விளை பொருட்கள் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் மேலும் புதிய டோல்கேட்டுகள் திறப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Edit by Prasanth.K